முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மொபைல் வாங்க மனைவியை ரூ.1.8 லட்சத்துக்கு விற்றவர்

ஒடிசா மாநிலம் ராய்ப்பூர் பாலங்கீரியை சேர்ந்தவர்  17 வயது சிறுவன். இவருக்கு  கடந்த ஜூலை மாதம்  அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். ஆகஸ்ட் மாதம் தம்பதியினர் ராய்பூர் மற்றும் ஜான்சி வழியாக ராஜஸ்தானுக்கு செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர்.  அங்கு தங்கிய  சில நாட்களில்,  தனது மனைவியை ரூ.1.8 லட்சத்திற்கு பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவருக்கு சிறுவன்   விற்றுள்ளார்.  மனைவியை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து உள்ளார். பிறகு  ஒரு ஸ்மார்ட் போனும் வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது சொந்த ஊர் திரும்பி உள்ளார். ஊர் திரும்பியவரிடம்  மனைவியை எங்கே என குடும்பத்தினர் கேட்டபோது, அவர்   தன்னை விட்டு விட்டு வேறு ஒருவருடன்  ஓடி விட்டதாக கூறி உள்ளார்.  இதில் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸாரின் விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. தற்போது சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார் அந்த சிறுவன்.

அதிசய பாறை

மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனின் வெண்ணைப் பந்து போன்ற பாறை தகுந்த பிடிப்பு ஏதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்படியே இருக்கிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானதாக அறியப்படும் இது இயற்கையாக வந்ததா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது.

திசை காட்டும் தாவரம்

தென் ஆப்பிரிக்க பாலைவனங்களில் காணப்படும் ஒரு வகை தாவர இனம் பாட்சிபோடியம் நாமகுவானம் (Pachypodium Namaquanum). இந்த செடியில் நீளமான ஒரு கிளை மட்டுமே காணப்படுகிறது.மேலும் தண்டு எப்போதும் வடக்கு திசை நோக்கியே சாய்ந்து நிற்க்கும் இயல்புடையது. பாலைவனங்களில் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த செடியை திசைகாட்டும் கருவியாக பயன்படுத்துகின்றனர்.

விஞ்ஞானிகள் சாதனை

உடல் உறுப்புகள் தட்டுப்பாடு காரணமாக, பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தலாமா என்ற ஆய்வில் ஈடுபட்டுவந்த விஞ்ஞானிகள் தற்போது, பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, பன்றியின் உடல் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் அடங்கி கிடக்கும் ‘பெர்வ்’ எனப்படும் வைரஸ்களை அகற்றும் ஆய்வில் ஈடுபட்டனர். தற்போது அவற்றை அகற்றி வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், எதிர்காலத்தில் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஏன்

நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆப்பிள் பழங்கள் வாங்கும் போது அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அது எதற்காக என யாருக்கும் தெரியாது. அது என்ன? இதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் ஒளிந்துள்ளன.PLU code (price lookup number)  எனப்படும் இதை வைத்து தான் அந்த ஆப்பிள் ரசாயன உரங்களில் விளைவிக்கப்பட்டதா, மரபணு மாற்றம் செய்யப்பட்டதா, இயற்கை உரத்தில் விளைந்ததா என்பதை அறிய இயலும். இதை எப்படி தெரிந்து கொள்வது.. அதில் 4 இலக்க எண் இருந்தால் ரசாயன உரத்தால் ஆனது, ஐந்து இலக்க எண் 8 இல் தொடங்கினால் அது மரபணு மாற்றப்பட்டது. ஐந்திலக்க எண் 9 இல் தொடங்கினால் முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிளை பார்த்து வாங்குவீர்கள் தானே...

நவீன தொட்டில்

குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்த வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கென நவீன படுக்கை ஒன்றை கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது. வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க இது உதவுகிறது. மேக்ஸ் மேட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன. தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை மிமிக் செய்யக்கூடிய அமைப்புகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன. குழந்தை எதுபோன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony