முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட் பல்பு

சி.சிடிவி கேமராக்களின் விலை சற்று அதிகமாய் உள்ளதால் அனைவராலும் அதனை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. தற்போது சி.சிடிவி கேமராவிற்கு நிகரான ஸ்மார்ட் பல்பு இந்தியச் சந்தையில் பிரபலமடைந்து வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட் பல்பில் 360 டிகிரி எச்.டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட் பல்பில் வைஃபை, ஆடியோ ஸ்பீக்கர், மைக், மோஷன் டிடெக்டர், ஐ.ஆர் கட், 128 ஜிபி வரையிலான மெமரி கார்டு வசதி மற்றும் ஆர்.ஜி.பி நிறத்தை மாற்றும் சேவை எனப் பல சேவைகளை பட்ஜெட் விலையில் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. விலையும் மிகவும் குறைவுதான். ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பிறகென்ன வீட்டில் எங்கு தேவையோ வாங்கி மாட்டுங்கள்.. இனி திருடன் உங்களிடம் வாலாட்ட முடியாது..

எல்.இ.டி ஸ்டிக்

மரத்தாலான ஸ்டிக் ஒன்றில் எல்.இ.டி கதிர்களை உமிழும் விளக்குகளைப் பொருத்தி காற்றில் படம் வரையும் அதிசயத்தை டிஐஒய் நெட்வொர்க் எனும் நிறுவனம். இந்தக் கருவிக்கு பிக்செல் ஸ்டிக் என்று பெயரிட்டுள்ளனர். பார்ப்பதற்கு மேஜிக் போல தெரிந்தாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது சாத்தியமாகியுள்ளது.

தக்காளியின் மகிமை

வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி அன்றாட உணவில் பயன்படுத்தும் தக்காளிக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வயிற்று புற்று நோய் ‘மாலிக்னன்ட் செல்’ எனப்படும் திசுக்களால் ஏற்படுகிறது. இந்த திசுக்களை மேலும் வளரவிடாமலும், அவை பரவாமலும் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உள்ளதாம்.

கால்சியத்தின் பங்கு

வீடு கட்ட பயன்படுத்தும கான்கிரீட் கலவையைவிட 4 மடங்கு வலிமையானது மனித எலும்பு. பிறக்கும் போது ஒரு குழந்தையின் உடலில் சுமார் 350 எலும்புகளும், அதுவே வளர்ந்த ஒருவருக்கு சுமார் 206-ஆக இருக்கும். இந்த எலும்புகளின் உறுதிக்கு கால்சியமே முக்கிய காரணம்.  நம் உடலில் உள்ள மொத்த கால்சியத்தில் 99 சதவீதம் எலும்புகளில் தான் படிந்திருக்கிறது.

உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?

உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது தெரியுமா.. நீங்கள் இந்தியா என்று எண்ணினால் அது தவறு. இன்றைக்கும் சீனா தான் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. பண்டைய காலத்தில் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சீன பட்டுகளை கொண்டு செல்வதற்காகவே தனியாக வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. அவை இன்றும் பட்டுச்சாலை அல்லது சில்க் ரூட் என அழைக்கப்படுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பட்டு நூல் தயாரித்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. அதே போல பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை உருவாக்கியதிலும் சீனர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.

செவ்வாயில் குடியேறலாம்....

அமெரிக்காவில், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, ஓரியண் விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா ஆய்வு மையம் கவனம் செலுத்தி வருகிறது. அங்கு மனிதர்களை குடியேற்றம் செய்யவும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளுக்காக கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளநிலையில், மற்றொரு ரோவர் விண்கலத்தினை 2020 வாக்கில் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் வரும் 2033ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை நாசா நிச்சயம் அனுப்பும் என நம்பப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago