முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாகுபலி ஜுரம்

இந்தியத் திரையுலகில் புதிய சாதனையாக, 1000 கோடி வசூலித்த பாகுபலி-2 திரைப்படத்தின் தாக்கம், பாகுபலி புடவை, பாகுபலி டீசர்ட் எனத் தொடர்ந்த நிலையில், இப்போது வங்கி டெபிட் கார்டில் அச்சிடும் அளவுக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த பாகுபலி போஸ்டரை தனது டெபிட் கார்டின் முன்பக்க படமாக வடிவமைத்துக்கொள்ளும் ஆப்ஷனை வழங்குவதாக அறிவித்துள்ளது.

மிக அருகில்

மிக பெரிய கிரகமான வியாழன், பூமியில் இருந்து 60 கோடியே 80 லட்சம் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. கடந்த 3-ம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்த வியாழன் கிரகத்தை நாசா அனுப்பிய அதி நவீன சக்தி வாய்ந்த ஹப்பிள் விண்கலத்தின் டெலஸ்கோப் சமீபத்தில் மிக அருகில் போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது.

புதிய தகவல்

மேற்குவங்கத்தை சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தை எழுதியுள்ளார்.அவரது மற்றொரு பாடல் நமக்கு அருகாமையில் உள்ள வங்க தேசத்தின் தேசியப்பாடலாக உள்ளது. இரு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய பெருமைப்பெற்ற ஒரே உலக கவிஞர் நமது ரவீந்திர நாத் தாகூர்தான்.

இரும்பு மழை பெய்யும் கோள்

வாஸ்ப் – 76பி என்ற ஒரு புத்தம் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில்  இரும்பு மழை பெய்கிறது என்பதை விண்வெளி அறிஞர்கள் கண்டு வியந்திருக்கிறார்கள்.வாஸ்ப் 76பி என்று அறியப்படும் இந்த கோள், அதனுடைய நட்சத்திரத்தை சுற்றி வரும்போது, அதன் பகல் பகுதி வெப்பநிலை 2,400 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கிறது. இந்த வெப்பநிலை உலோகங்களை ஆவியாக்கும் ன்மை கொண்டது. இரவு நேரப் பகுதியில் இந்தக் கோளின் வெப்பநிலை 1400 டிகிரியாக குறைந்துவிடுகிறது. இந்த வெப்பநிலையில், பகல் நேரத்தில் ஆவியான உலோகங்கள் இறுகி மழையாகப் பெய்கின்றன.ஜெனீவாவை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் டேவிட் ஹெரேயின்ச்  கூறுகையில்,  தண்ணீர் துளிகளுக்கு பதிலாக இரும்பு துளிகளின் சாரல் தலையில் அடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்றார். நேச்சர் என்ற சஞ்சிகையில் இந்த கோள் குறித்த கண்டுபிடிப்புகளை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பழங்கால கல் கோளங்கள் அல்லது கல்பந்துகள் எங்குள்ளன தெரியுமா?

பார்ப்பதற்கு பூங்காவில் அழகிய வடிவமைப்புக்காக செய்து வைக்கப்பட்டுள்ளதை போல காட்சியளிக்கும் கல் கோளங்கள் கோஸ்டா ரிகாவில் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றை உள்ளூர் வாசிகள் கல் பந்துகள் என்றழைக்கின்றனர். 1 செமீ தொடங்கி 2 மீ விட்டம் கொண்ட சுமார் 15 டன் வரையிலான எடை கொண்ட ஏராளமான கல் கோளங்கள் கண்டறியப்பட்டன. இவை சுமார் கிபி 600 முதல் 1500 வரையிலான கால கட்டத்தைச் சேர்ந்தவையாக கூறப்படுகிறது. டிக்யூஸ் கலாச்சாரத்தை சேர்ந்த இந்த கற்கோளங்கள் எதற்காக செய்யப்பட்டன என்பது விளங்காத மர்மமாகவே வரலாற்றில் இது வரை இருந்து வருகிறது என்றால் ஆச்சரியம் தானே..

மலாலா யூசுப்சாய்!

பாகிஸ்தானில் பெண் கல்வி பற்றி பேசிய மலாலா துப்பாகியால் சுடப்பட்டார். தோட்டா இவரது மண்டை ஓட்டில் இருந்து தண்டுவடம் நோக்கி பாய்ந்தது. எனினும் மரணத்தை தொட்டு திரும்பிய அவர் பெண் கல்விக்காக மீண்டும் குரல் கொடுக்க ஆரம்பித்தார் மலாலா. இதற்காக இவர் நோபல் பரிசு பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago