முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நவீன தொட்டில்

குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்த வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கென நவீன படுக்கை ஒன்றை கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது. வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க இது உதவுகிறது. மேக்ஸ் மேட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன. தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை மிமிக் செய்யக்கூடிய அமைப்புகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன. குழந்தை எதுபோன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

100 மடங்கு வேகம்

தற்போதைய வைஃபை இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியுமாம்.

சாதனைப் பெண்

இத்தாலியில் லோ ஷோ டி ரிகார்டு  என்ற உலகசாதனைக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சர்க்கஸ் பெண் எல்லிஸ், 35 வாட்ஸ் திறன் கொண்ட ஓடும் 2 ஃபேன்களின் இறக்கைகளை தன் நாக்கை வைத்து நிறுத்தி அசத்தினார். இது போன்று அவர் தொடர்ந்து 16 முறை 2 ஃபேன்களின் இறக்கைகளை நிறுத்தி சாதனை படைத்துள்ளார்.

ஆபாசம் வன்முறை

மதுப்பழக்கத்தைத் தூண்டும் காரணங்களில் ‘சமூக வலைதளங்களில் பரவும் ஆபாசம் மற்றும் வன்முறை சார்ந்த வீடியோக்கள் இளம்பருவத்தினரிடம் மதுப்பழக்கத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்று இங்கிலாந்தின் உளவியல் நிபுணரான ஜோன் க்ரான்வெல் கண்டறிந்துள்ளார்.

ஐந்து பொத்தான்கள்

சீனாவை ஆண்ட டி.ஆங் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில்தான் சீனர்கள் தங்கள் சட்டைகளுக்கு ஐந்து பொத்தான்களை வைத்து அணியும் பழக்கத்தை மேற்கொண்டனர்.அதற்கு கன்ஃபூஷியஸ் மதத்தின் அன்பு, அறிவு, துணிவு, வாய்மை, நேர்மை ஆகிய ஐந்து கொள்கைகளையும் பின்பற்றவேண்டும் என்பதுதான்.

முதல் உலகப் போரில் பஞ்சாபிய வீரர்கள்

 இந்த உலகம் நேரடியாக 2 உலகப் போர்களை கண்டுள்ளது. இனி நேரடியான உலகப் போர்கள் சாத்தியமில்லை என்ற கட்டத்துக்கு வரலாறு முட்டு சந்தில் வந்து நிற்கிறது. அதை மீறி நடந்தால், இந்த பூமி ஒரு பிடி சாம்பலாக மாறி பிரபஞ்சவெளியில் காணாமல் போய்விடும். ஆனாலும் உலக நாடுகள் ஒன்றையொன்று இன்னும் பிறாண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அது கிடக்கட்டும்.. முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய டிஜிட்டல் உலகில் பல வெளியில் தெரியாத ரகசியங்கள் படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் தி கார்டியன் வெளியிட்ட செய்தியில் முதலாம் உலகப் போர் தொடர்பான ஆவணங்ள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டதில் பிரிட்டனுக்காக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றது தெரியவந்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் விரிந்து கிடக்கும் சீக்கிய பிராந்தியங்களிலிருந்து சிறிய குக்கிராமத்திலிருந்து கூட தன்னார்வலர்களாக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.  ஆனால் இந்த எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என போர் வரலாற்றாய்வாளர்கள் கணிக்கின்றனர். இது இன்னும் விரிவான ஆய்வுக்கும், ஆவணப்படுத்தலுக்குமான செய்தியாகும். இது மிகவும் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago