முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மூக்கை பிடித்துக் கொண்டு நம்மால் 'ஹம்' செய்ய முடியுமா?

பலரை நாம் பார்த்திருக்கலாம். எப்போதும் ஏதேனும் ஒரு மெட்டை வாயால் ஹம் செய்து கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலரோ ஹம் செய்தபடியே வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ தெரியாதோ...உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். அதாவது மூக்கை விரல்களால் இறுக்கமாக மூடிக் கொண்டு நம்மால் ஹம் செய்ய முடியாது. வேண்டுமானால் சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். என்னா ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

நீர் பட்டால் வெடிக்கும் ரசாயனங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீரை ஊற்றி அணைப்பது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இருப்பதுதான் அறிவியலின் சிறப்பு. ஆம், சில தனிமங்கள் தண்ணீர் பட்டாலே பட்டென்று வெடித்து விடும் என்றால் ஆச்சரியம் தானே... பொட்டாசியம், சோடியம், லித்தியம், ரூபிடியம, சீசியம் போன்றவைதான் அவை. இவை தண்ணீர் பட்டால் வெடிக்கும் திறன் கொண்டவை. வெளியில் எடுத்து விட்டால் மிகவும் சமத்தாக அமைதியாக இருந்துவிடும்.

சிவப்பு செவ்வாய்

சூரியனில் இருந்து 4-வதாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் புயலால் மேற்பரப்பில் இருக்கும் சிவப்பு மாசை வளிமண்டலத்தில் நிரப்பிவிடும்.அங்கு, ஈர்ப்பு விசை குறைவு காரணமாக, இந்த மாசுத் துகள்கள் நீண்ட நாட்களுக்கு அப்படியே பரவியிருக்கும். இதனாலேயே செவ்வாய் கோள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

குரங்குக்கு டயட்

பாங்காக்கில் உள்ள புளோட்டிங் மார்க்கெட் என மிதக்கும் சந்தை அருகே குண்டு குரங்கு ஒன்றை கண்ட வனவிலங்கு அதிகாரிகள் அதன் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். குண்டு அங்கிள் என்ற பெயர் வைத்து,  15 கிலோவாக இருக்கும் அதன் எடையை குறைக்க டயட்டை பின்பற்றச் சொல்லி, தினமும் ஓட வைத்து பயிற்சி கொடுக்கிறார்களாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!