முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காளான் பிரியாணி

Cooking time in minutes: 
30
Ingredients: 
காளான் பிரியாணி செய்யத் தேவையான பொருள்கள்;
  1. காளான் 1/4 கிலோ.
  2. பிரியாணி அரிசி - 1/2 கிலோ.
  3. சின்ன வெங்காயம் - 10.
  4. பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  5. பொடியா நறுக்கிய தக்காளி - 1.
  6. தேங்காய் - 1/2 மூடி.
  7. எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.
  8. இஞ்சி - 10 கிராம்.
  9. பூண்டு - 10 பல்.
  10. மல்லி,புதினா - ஒரு கைப்பிடி அளவு.
  11. மிளகாய்தூள் - 2 டீஸ்பூன். 
  12. தயிர் - 3 டீஸ்பூன்.  
  13. எலுமிச்சம் பழம் - ½ ஸ்பூன். 
  14. நெய் - 2 டீஸ்பூன்.
  15. பட்டை - 10 கிராம்,
  16. கிராம்பு - 8.
  17. லவங்கம் - 2 கிராம்.
  18. பிரியாணி இலை - 2.
  19. ஏலக்காய் - 1.
  20. சோம்பு - 1/2 டீஸ்பூன்.
  21. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. மிக்சி ஜாரில் 5 கிராம் பட்டை, 4 கிராம்பு, 2 கிராம் லவங்கம், 10 கிராம்  இஞ்சி, 10 பல் பூண்டு, மற்றும் 10 சின்ன வெங்காயத்தை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் வைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சி ஜாரில் 1/2 மூடி தேங்காய்யை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி தேங்காய்பாலை தயார் செய்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்,
  4. எண்ணெய் சூடானவுடன் 2 பிரியாணி இலை, 5 கிராம் பட்டை, 4 கிராம்பு, 1 ஏலக்காய், மற்றும்1/2 டீஸ்பூன் சோம்பு போட்டு வறுக்கவும்.
  5. பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  6. ஒரு கைப்பிடி அளவு புதினா,மல்லி போட்டு வதக்கவும்.
  7. மிக்சியில் அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
  8. பொடியா நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு வதக்கவும்.
  9. 1/4 கிலோ காளானை போட்டு வதக்கவும்.
  10. 1/2 கிலோ பிரியாணி அரிசி,2 டீஸ்பூன் மிளகாய்தூள்,3 டீஸ்பூன் தயிர்
  11. மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கிளறிவிடவும்.
  12. எலுமிச்சை பழ சாறு  1/2 ஸ்பூன்  மற்றும் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறிவிடவும்.
  13. 4 கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் ஊற்றி கலந்து விட்டு குக்கரை முடி 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
  14. சுவையான காளான் பிரியாணி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago