முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பெரி பெரி இறால்.

Cooking time in minutes: 
20
Ingredients: 

பெரி பெரி இறால்  செய்யத் தேவையான பொருள்கள்;

  1. இறால் 10 பிஸ்.
  2. பொடியாக நறுக்கிய வர மிளகாய் - தேவையான அளவு.
  3. மிளகாய் தூள் - 1 சிட்டிகை.
  4. கருப்பு மிளகுத்தூள் - 1 ஸ்பூன்.
  5. ஆலிவ் ஆயில் - 4 ஸ்பூன்.
  6. கற்பூர வள்ளி துளசி பொடி - 1 சிட்டிகை.
  7. குத்தக்கூடிய குச்சிகள் – 3.
  8. எலுமிச்சம் பழச் சாறு – 1/2 ஸ்பூன்.
  9. பெரி பெரி பவுடர் - 1 சிட்டிகை.
  10. கொத்தமல்லி  - சிறிதளவு.
  11. வெங்காயம்,கேரட்,இலைக்கோசு – சிறிதளவு.
  12. உப்பு -  தேவையான அளவு .

Method: 

 

செய்முறை ; 

  1. ஒரு பாத்திரத்தில் 10 பிஸ் இறால், பொடியாக நறுக்கிய வர மிளகாய் தூள் சிறிதளவு, மிளகாய் தூள் ஒரு சிட்டிகை, கருப்பு மிளகுத்தூள் ஒரு ஸ்பூன், ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன், கற்பூர வள்ளி துளசி பொடி ஒரு சிட்டிகை,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. 15 நிமிடம் ஆகி விட்டது,ஊற வைத்த இறாலில் 1/2 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறை ஊற்றி கலந்து விடவும்.
  3. குத்தக்கூடிய குச்சிகளை எடுத்து இறால் துண்டுகளை ஒவ்வென்றாக சொருகவும்.
  4. இதே போல் 3  குச்சிகளையும்  தயார் செய்துகொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன் ஊற்றவும்.
  6. ஆலிவ் ஆயில் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள இறால் துண்டுகள் உள்ள குச்சிகளை ஒவ்வென்றாக வைத்து குறைவான தணலில் பொரிக்கவும்.
  7. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  8. தொடர்ந்து குறைவான தணலில் 15 நிமிடங்கள் திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  9. பெரி பெரி பவுடர் 1 சிட்டிகை மற்றும் கொத்தமல்லி சிறிதளவு தூவவும்.
  10. நன்றாக பொரிந்து விட்டது, அடுப்பில் இருந்து சிக்கனை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
  11. சிறிதளவு வெங்காயம்,கேரட்,இலைக்கோசு வைத்து பரிமாறவும்.
  12. சுவையான பெரி பெரி இறால் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்