முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய விமானத் திலிருந்து வரும் ஒலி கண்டுபிடிப்பு?

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பெர்த், ஏப்.7 - காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல் ஒன்று, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் ஒரு வித ஒலி அலைகளை கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து சீன செய்தி நிறுவனமான ஷின்குவா கூறியிருப்பதாவது: காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் சீனாவைச் சேர்ந்த ஹாய்ஷுன் 01 என்ற கப்பல் ஈடுபட்டுள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டறிவதற்கு உதவும் வகையில் அந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ள கருவி, இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் இருந்து வந்த ஒருவித ஒலி அலைகளை கண்டுபிடித்தது. இருப்பினும் அந்த ஒலி, மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து வந்ததா? இல்லையா?என்பது குறித்து தெரியவில்லை என்று ஷின்குவா தெரிவித்துள்ளது.

சீன அரசு தொலைக்காட்சியான சிசிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், கப்பலில் இருந்தவர்கள், பிற்பகல் அந்த ஒலி அலைகளை கண்டுபிடித்துள்ளனர். சுமார் ஒன்றரை நிமிடம் அந்த ஒலி அலை நீடித்துள்ளது. இது குறித்து சீனா மற்றும் அஸ்திரேலிய மையங்களை கப்பலில் இருந்தவர்கள்  உஷார் படுத்தி உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அந்த பகுதிக்கு, பிரிட்டன் நாடு தனது நீர் மூழ்கி கப்பலை அனுப்பியுள்ளது. இதேபோல் அமெரிக்காவும் அப்பகுதிக்கு நீருக்கடியில் தேடுதல் வேட்டை நடத்தும் 2 அதிநவீன வாகனங்களை அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago