முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கட்சியின் கொடி இன்று அறிமுகம்: வாசன்

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - புதிய கட்சியின் கொடி சென்னையில் இன்று வெளியிடப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரையே கட்சிக்கு வைக்க வேண்டும் என பெரும்பாலான ஆதரவாளர்கள் விரும்புவதாக குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், புதிய கட்சி தொடங்குவதாக அண்மையில் அறிவித்தார். கட்சியின் பெயர், கொடி, சின்னம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி, புதிய கட்சியின் கொடி சென்னையில் இன்று வெளியிடப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து