முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் ஆகஸ்ட் மாத தரிசனத்திற்கான டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு

சனிக்கிழமை, 11 மே 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-29

Source: provided

திருமலை :  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகளுக்கான (ஆர்ஜித சேவை) ஆகஸ்ட் மாத டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு வரும் 18-ம்தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் வெளியிடுகிறது. 

இந்த சேவை டிக்கெட்டுகளில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்டவற்றுக்கு வரும் 18-ம்தேதி காலை 10 மணி முதல் தொடங்கி 20-ம்தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம். 

குலுக்கலில் தேர்தெடுக்கப்படுபவர்கள் வரும் 20-ம்தேதி முதல் 22-ம் மதியம் 12 மணி வரை முன் பணம் செலுத்தியவர்களுக்கு குலுக்கலில் தேர்தெடுக்கப்பட்ட டிக்கெட் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 17-ம்தேதி வரை நடைபெறும் பவித்திர உற்சவத்திற்குரிய டிக்கெட் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதே போல் கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவைகளில் நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்யும் விர்சூவல் சேவைகளுக்கான டிக்கெட் வரும் 21-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். 

ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கபிரதட்சணம் டோக்கன்கள் வரும் 23-ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆகஸ்ட் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வரும் 23-ம்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும்.

ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வரும் 24-ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும். திருமலை, திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் அறைகள் முன்பதிவு செய்ய வரும் 24-ம்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். 

திருமலை, திருப்பதியில் ஸ்ரீவாரி சேவா தன்னார்வ சேவைக்கு வரும் 27-ம்தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவைக்கு மதியம் 12 மணிக்கும், உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணி சேவைக்கு மதியம் ஒரு மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும். 

எனவே தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து