முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளைக்கிழங்கு பிரெட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

உருளைக்கிழங்கு பிரெட் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 300 கிராம்.
  2. பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்.
  3. உப்பு - சிறிதளவு.
  4. முட்டை - 3.
  5. ஈஸ்ட் – 2 ஸ்பூன்.
  6. சர்க்கரை - 100 கிராம்.
  7. ரோஸ் வாட்டர்  1/4 ஸ்பூன்.
  8. வெண்ணிலா  1/4 ஸ்பூன். 
  9. மைதா மாவு- ஒரு ஸ்பூன்.
  10. கேக் மிக்ஸ்  400 கிராம்.
  11. பட்டர் - 50 கிராம்.

 

Method: 

செய்முறை ;--  

  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு  தண்ணீர் ஊற்றி தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கிய 300 கிராம் உருளைக்கிழங்கை போட்டு பாத்திரத்தை மூடி போட்டு மூடி 5 நிமிடம் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைக்கவும்.
  2. வேக வைத்த  உருளைக்கிழங்கில் உள்ள நீரை வடி கட்டி விட்டு உருளைக்கிழங்கை மசித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துகொள்ளவும்.
  3. இதனுடன்  1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா, சிறிதளவுஉப்பு,ஈஸ்ட் 2 ஸ்பூன்,சர்க்கரை 100 கிராம்,ரோஸ் வாட்டர்  1/4 ஸ்பூன்,வெண்ணிலா  1/4 ஸ்பூன்,மைதா மாவு ஒரு ஸ்பூன் போட்டு 3 முட்டையை உடைத்து ஊற்றி  நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. இதனுடன் 400 கிராம் கேக் மிக்ஸ்  மற்றும் 50 கிராம் பட்டர் போட்டு  நன்றாக கலந்து மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  5. ஒரு மணி நேரம் கழித்து மாவை எடுத்து தடிமனாக தட்டி  செவ்வக  வடிவத்தில் மாவை வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் தவாவை வைத்து தயார் செய்து வைத்துள்ள மாவை வைத்து மூடி போட்டு மூடி நன்றாக நன்றாக வேக வைக்கவும்.
  7. திருப்பி திருப்பி போட்டு எல்லா பக்கங்களிலும் வேக வைத்து எடுக்கவும்.
  8. சுவையான உருளைக்கிழங்கு பிரெட் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்