முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணி

வியாழக்கிழமை, 9 மே 2024      அரசியல்
Modi-1-2023-08-15

வாரணாசி, வரும் 14-ம் தேதி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக 13-ம் தேதி பிரதமர் மோடி அங்கு பிரம்மாண்டமான பேரணி நடத்தவுள்ளார். 

பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 14-ம் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் வரும் 13-ம் தேதி பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. 

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாரணாசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் வரும் 14-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாரணாசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன. 

உத்தரபிரதேசத்தில் புனித நகரமான வாரணாசியின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

வரும் 14-ம் தேதியிலும் அதே போல் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக 13-ம் தேதி பிரதமர் மோடி வாரணாசி செல்ல உள்ளார். அதே நாளில் அவரது ரோடு ஷோ வாரணாசியில் நடைபெற உள்ளது.

பிரதமர் தனது வேட்புமனுவை வாரணாசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட கலெக்டரான தமிழகத்தை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் உள்ளார். 

வாரணாசியுடன் சேர்த்து உத்தரபிரதேசத்தின் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் மூன்றாவது நாளான ஜூன் 4-ல் நாடு முழுவதிலுமான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து