முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஙகம் விலை சற்று குறைந்தது

புதன்கிழமை, 8 மே 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனையானது.

சா்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், அமெரிக்காவில் வட்டி வீத மாற்றம் குறித்த தகவல்கள், டாலரின் மதிப்புயா்வு உள்ளிட்டவைகளால் மே மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயா்ந்து ரூ. 6,640-க்கும், பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.53,120-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், புதன்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 6,630-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லாமல் கிராம் ரூ. 88.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.88,500-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து