முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

நவம்பர் - கருத்துக்கள் 0 வாசிக்கப்பட்டது 6 பிரதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும்
பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன்
கோலாகலமாக தொடங்கியது. இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம்,
ஆராதனை பூஜை நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் அலங்கார ரூபத்தில் எழுந்தருளினர். காலை 6.40 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர்.
அண்ணா மலையாருக்கு விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் இன்று மாலை அணிவித்து விரதம்
தொடங்கினர். கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களும்,
காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதிஉலா நடைபெறும். முதல்நாளான
இன்று காலை கண்ணாடி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் பவனியும், இரவு மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுப்பிர மணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையாரும், சிம்ம வாகனத்தில் பராசக்தி அம்மனும்,
வெள்ளி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் வீதிஉலா வருகின்றனர். தொடர்ந்து 2-ம் நாள் உற்சவத்தில்
வெள்ளி இந்திர விமானத்திலும், 3-ம் நாள் உற்சவத்தில் சிம்ம நாள் உற்சவத்திலும், 4-ம் உற்சவத்தில்
வெள்ளி கற்பக வாகனத்திலும், 5-ம் நாள் உற்சவத்தில் பெரிய ரிஷப வாகனத்திலும் உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையார் வலம் வந்து அருள்பாலிக்கிறார்.
6-ம் நாள் உற்சவமான வரும் 1- ந்தேதி வெள்ளித் தேரோட்டமும், 7-ம் நாள் உற்சவமாக 2-ந்தேதி பஞ்சரத பவனியும் (தேரோட்டம்) நடைபெறும். 8-ம் நாள் பிச்சாண்டவர் உற்சவமும், 9-ம் நாள் உற்சவத்தில் கைலாச வாகனத்திலும் சுவாமி பவனியும் நடைபெறும்.
தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக5-ம் தேதி 10ம் நாள் திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மகாதீப பெருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
தீபத்திருவிழாவை தரி சிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். தீபத்திருவிழாவில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து