முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் இன்று ஜி.கே.வாசன் கட்சி தொடக்க விழா

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

திருச்சி - தமிழ்நாடு காங்கிரசிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் விலகினார். இதைதொடர்ந்து திரு¢¢ச்சியில் இன்று 28ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதிய கட்சி தொடங்கப்போவதாக அவர் அறிவித்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் அவரது கட்சியில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் இன்று பொன்மலை ஜி கார்னரில் மாநாடு போல பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இரவு, பகலாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னையில் ஜி.கே.வாசன் தன்னுடைய புதிய கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார்.
திருச்சி பொன்மலை ஜிகார்னரில் இன்று (28ந்தேதி) மாலை பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து 8 ஆயிரம் வாகனங்களில் ஜி.கே.வாசன் கட்சியினர் திருச்சிக்கு வரப்போவதாக ஏற்கனவே திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் வேலூர் ஞானசேகரன் கோவை தங்கம், விடியல் சேகர், திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரம் பஸ்கர், 8 ஆயிரம் கார்கள், 5 ஆயிரம் வேன்கள், ஜி.கே.வாசன் கட்சியினர் இன்று திருச்சிக்கு வருகின்றனர். 3 லட்சம் பேர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக முன்னனி தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். விழாவிற்கு வரும் வாகனம் நிறுத்துவதற்காக திருச்சியில் 7 இடங்களை திருச்சி மாநகர போலீசார் அமைத்துள்ளார்கள்.
மேலும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகைதரும் தொண்டர்களுக்காக கழிப்பிட வசதி, குடிநீர் வசதி தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகருக்குள் நுழையும் 7 நுழைவு வாயில் பகுதிகளில் கட்சி தொண்டர்களை வரவேற்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்ட மேடை 60 அடி நீளத்தில் 40 அகலத்தில் பிரமாண்டமாக அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. மேடையின் இடது புறத்தில் சென்னை தலைமை செயலகத்தின் மாதிரியும், வடது புறத்தில் டெல்லி நாடாளுமன்றம் மாதிரியும் கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளது மேடைக்கு முன்புறம் 32 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்ட நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. முதலில் லஷ்மி ஸ்ருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. அதைதொடர்ந்து பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கும். 32 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஜி.கே.வாசன் ஏற்றி வைத்து 250 தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அதைதொடர்ந்து பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முதலில் முன்னனி தலைவர்கள் பேசுகிறார்கள். இறுதியாக இரவு 8 மணிக்கு ஜி.கே.வாசன் உரையாற்றுகிறார். பின்பு 8.30 மணியுடன் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைகிறது. பொதுக்கூட்டத்திற்கு வரும் பெண்கள் உட்காருவதற்காக தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் இந்த பொதுக்கூட்டத்திற்காக எங்கு பார்த்தாலும் கொடிகள் கட்டப்பட்டுள்ளது மாநாட்டு அழைப்பு பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. பிரச்சார வாகனங்கள் திருச்சி மாநகர் முழுவதும் சுற்றி வருகிறது. பொதுக்கூட்ட திடலில் உயர் மினகோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொது¢கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஐஏஎஸ். ஐபிஎஸ். பிரபல வக்கீல்கள், மாணவர்கள், மகளிர் அணியினர் ஆகியோர் திரண்டு வருகிறார்கள் என கட்சி முன்னினி நிர்வாகிகள் தெரிவித்தனர். இப்பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏக்கள் விடியல் சேகர், கோவை தங்கம், வேலூர் ஞானசேகரன், திருச்சி மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜேசேகரன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா, திருச்சி குணா, உள்ளிட்ட பலர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுமாலை சரியாக 5 மணிக்கு ஜி.கே.வாசன் முன்னனி தலைவர்களுடன் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர் ஞானதேசிகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பீட்டர் அப்போன்ஸ், விடியல் சேகர், கோவை தங்கம், சக்தி வடிவேலு, திருச்சிமாவட்ட முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜசேகரன், திருச்சி முன்னாள் மேயர் சாருபால தொண்டைமான், மற்றும் வாசன் எஸ்டேட் ரவி முருகையா, கே.வி.ஜி.ரவீந்திரன், தர்மராஜ், ஏ.ஜி.ஆனந்தராஜ், இன்டர்நெட் ரவி, திருச்சி டி.குணா இளைஞர் காங்கிரஸ் ராஜராஜசோழன், ஜெயகர்ணா, க.பி.பாலசுப்பிரமணியம் உள்பட முன்னனி தலைவர்கள் வந்தனர்.
அதைதொடர்ந்து பொதுக்கூட்ட மைதானத்தில் 100 கிலோ எடையுள்ள பிரமாண்ட பலூனை ஜி.கே.வாசன் ஆகாயத்தில் பறக்கவிட்டார். அப்பொழுது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கரகோஷம் எ-ழுப்பினார்கள். பின்னர், பொதுக்கூட் மேடையை ஜி.கே.வாசன் சுற்றிப்பார்த்தார். அதன்பின்பு ஜி.கே.வாசன் கட்சி முன்னனி தலைவர்களுடன் மேடைக்கு அருகில் உட்கார்ந்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து