முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - காஞ்சிபுரத்தில் அமைக்கப்படவுள்ள “பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா ” வின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி. எஸ்.கோகுல இந்திரா தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் முதன்மைச் செயலாளர்.ஹர்மந்தர்சிங்,, கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் . தி.ந.வெங்கடேஷ், துறையின் கூடுதல் இயக்குநர்.கே.கர்ணன், பட்டுப்பூங்கா நிர்வாக இயக்குநர் .என்.வி.ராஜேஷ் இணை இயக்குநர் (கைத்தறி) காஞ்சிபுரம் சரக இணை இயக்குநர் / துணை இயக்குநர் (பொறுப்பு) மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இப்பட்டு பூங்காவிற்கு மத்திய, மாநில அரசு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவிற்கு மாநில அரசு காஞ்சிபுரம், கீழ்கதிர்பூர் கிராமத்தில் ரூ.13.77 கோடி மதிப்புடைய 75 ஏக்கர் நிலத்திற்கு தமிழக அரசு 28.07.2012 அன்று ரூ.7.54 கோடி மானியமும், எஞ்சிய ரூ.6.23 கோடியை 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்ததக்க அரசுக் கடனாகவும் தமிழக அரசு வழங்கியுள்ளது. இது தொடர்பான பணிகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு. செய்தார்.
இப்பட்டுபூங்காவில் 115 தொழிற்கூடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதி மற்றும் பொது வசதி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் இப்பகுதியை சேர்ந்த 10,000 பட்டு நெசவாளர்கள் பயன்பெறுவார்கள்.
இப்பட்டு பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் பகுதி பட்டு நெசவாளர்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பும் பொருளாதாரம் மேம்பாடும் அமைவதை கருத்திற்கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் விரைவில் முடிக்குமாறு அமைச்சர் அறிவு றுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து