முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு சத்துணவுடன், பேரீச்சம் பழம் வழங்க கோரிக்கை

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயம் வளர்ச்சி குறைந்து வரும் நிலையில், விவசாயிகளின் வருவாய் பெருகும் விதமாக, மாற்றுப் பயிர்களுக்கும் ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே ரேசன் கடைகளில் இலவச அரிசியின் அளவைக் குறைத்து அதற்கு பதிலாக கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்களை வழங்க வேண்டும். அரிசியின் அளவை குறைத்தாலும், அதற்கு ஈடாக புரத சத்து மிக்க சிறுதானியங்கள் இலவசமாக கிடைப்பதை நுகர்வோர் பெரிதும் வரவேற்பார்கள் என்ற வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சத்துணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு பேரீச்சம்பழம் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து