முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      இந்தியா
Google-2024-24-36

புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 

இந்த நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.  அந்த வகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கார் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடந்தது. 

கூகுள் நிறுவனம் முக்கிய தினங்களுக்கு, இணையதள பக்கத்தின் முகப்பில் டூடுலாக வெளியிட்டுச் சிறப்பிப்பது வழக்கம். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது. 

அதன்படி, கூகுள் லோகோவுக்கு மத்தியில், வாக்களித்ததற்கு அடையாளமாக மை பூசப்பட்ட இடதுகை ஆட்காட்டி விரல் இடம்பெற்றுள்ள டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டூடுலை கிளிக் செய்யும் போது, இந்தியாவில் நடைபெற்று வரும் 18-வது பாராளுமன்ற தேர்தலின் சமீபித்திய புதுப்பிப்புகள், தேடல் முடிவுகளாக கிடைக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து