முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க முகாம்கள்

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - இந்தியன் ஆயில் நிறுவன தலைமை தொடர்பு மேலாளர் வி.வெற்றிசெல்வக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக எந்தவித இன்னல்களும் இன்றி வங்கி கணக்கில் சேர்க்க ‘இண்டேன்’ வாடிக்கையாளர்களுக் காக சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்தியன் ஆயில் பவன் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை மாநகராட்சி பள்ளி விளையாட்டு மைதானம் சி-பிளாக் எம்.எம்.டி.ஏ. காலனி அரும்பாக்கம், குரு சந்திர மாளிகை எம்.கே.பி.நகர் வியாசர்பாடி, சமுதாய அரங்கம் சித்தாலப்பாக்கம், சுமங்கலி கல்யாண மண்டபம் புழுதிவாக்கம், திருவள்ளூர் மாவட்டத்தில் சேலை கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் ஆகிய 6 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க விரும்புபவர்கள் சிறப்பு பதிவு முகாம்களுக்கு ஆதார் அடையாள அட்டை நகல் 2, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் இருக்கவேண்டும் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை, கியாஸ் சிலிண்டர் சமீபத்தில் வாங்கியதற்கான கட்டண ரசீது, ஒருவேளை கட்டண ரசீது இல்லை என்றால் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கான நுகர்வோர் அட்டையின் நகல் (நீல நிற புத்தகம்) மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.
ஆதார் அடையாள அட்டை மற்றும் தற்போது வசிக்கும் முகவரி ஆகியவற்றில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின் தற்போது வசிக்கும் முகவரியை நிரூபிப்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும். ஆதார் அடையாள அட்டை இல்லாத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலையில் வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடு இருக்கவேண்டும்.
வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பதிவு செய்து முகாம்களிலேயே சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களில் அடித்தல், திருத்தங்கள் செய்வது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுவதற்கு வசதியாக அதிகாரிகள் இருப்பார்கள். ‘இண்டேன்’ சமையல் கியாஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த வசதி, வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து