முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் தேர்தலில் சின்சோ அபே வெற்றி: மோடி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - சமீபத்தில் 475 உறுப்பினர்களைக் கொண்ட ஜப்பான் பாராளுமன்ற கீழ் சபைக்கு தேர்தல் நடந்தது. இதில் சின்சோ அபே தலைமையிலான விடுதலை ஜனநாயக கட்சி கூட்டணியும், பிரதான எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயக கட்சி கூட்டணியும் அதிகாரத்தை கைப்பற்றப் போட்டியிட்டன. கருத்துக் கணிப்புகளின்படி அபே தலைமையிலான கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளைக் கைப்பற்றி சின்சோ அபே தலைமையிலான விடுதலை ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியான கோமிடோவும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்கும் சின்சோ அபே 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து பிரதமராக நீடிப்பார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற அபேக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “தேர்தலில் நீங்கள் அடைந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள், தகுதி வாய்ந்த உங்கள் தலைமையில் ஜப்பான் வளர்ச்சியின் புதிய உயரங்களை அடையும்“ என்று மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றதில் இருந்து இரு நாட்டு தலைவர்களும் நெருக்கமான நட்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து