முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட அமைப்பு தேர்தல்: ஆணையாளர்கள் - பொறுப்பாளர்கள் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தஞ்சை, ஈரோடு , கோவை, திருப்பூர் ,கடலூர் உள்ளிட்ட பத்து மாவட்டங்களுக்கு அதிமுக அமைப்புத் தேர்தல்கள் இரண்டாம் கட்டமாக வரும் 27 ந்தேதி முதல் 31 ந்தேதி வரை நடைபெறும் என்றும் இத்தேர்தல்களை நடத்த ஆணையாளர்களையும் நியமனம் செய்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக அமைப்புத்தேர்தல்கள் பத்து மாவட்டங்களுக்கு அண்மையில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக மேலும் பத்து மாவட்டங்களில் உட்கட்சித்தேர்தல்கள் நடைபெறும் என்று அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு ஈரோடு புறநகர், ஈரோடு மாநகர், திருப்பூர் புறநகர், திருப்பூர் மாநகர், கோவை மாநகர், கோவை புறநகர் , தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்ட கழகத்திற்கான ஒன்றிய கிளைகள் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகர வார்டு தேர்தல்கள் வரும் 27 ந்தேதி முதல் 31 ந்தேதி வரை நடைபெறும்.
இத்தேர்தல்களுக்கு ஆணையாளர்களாக அமைச்சர்களும் அதிமுக முன்னணி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான விரிவான பட்டியலை அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். இந்த பட்டியலில் தஞ்சை தெற்கு மாவட்ட கட்சித்தேர்தல் ஆணையாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தேர்தல் ஆணையாளராக பாராளுமன்ற உறுப்பினர் செம்மலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மேற்கு மாவட்ட ஆணையாளராக சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகர் மாவட்ட தேர்தல் ஆணையாளராக அதிமுக மீனவர் அணி இணைசெயலாளர் ஜெனிபர் சந்திரனும் சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் மில்லரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு புறநகர் மாவட்ட தேர்தல் ஆணையாளராக கால்நடைப்பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் ஆணையாளராக அதிமுக அமைப்புச்செயலாளரும் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சருமான கோகுல இந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல கோவை மாநகர் மாவட்டத்தேர்தல் ஆணையாளராக சிறுபான்மை பிரிவுத்தலைவர் ஜஸ்டீன் செல்வராஜூம் மகளிர் அணி துணைசெயலாளரும் சமூகநல வாரியத்தலைவருமான சி.ஆர்.சரஸ்வதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோவை புறநகர் மாவட்ட தேர்தல் ஆணையாளர்களாக கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தலைவர் சரஸ்வதி ரங்கசாமி ஆகியோர் செயல்படுவார்கள்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தேர்தல் ஆணையாளராக பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளருமான குமார் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல இம்மாவட்டங்களின் 7 வது கட்டமாக பிப்ரவரி 28 ந்தேதி முதல் நடைபெற இருக்கும் ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தலுக்கும் இப்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளே செயல்படுவார்கள் என்றும் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து