முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்னியில் பணயக் கைதிகள் சிறைபிடிப்பு: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - சிட்னியில் தீவிரவாதிகள் பணய கைதிகள் சிறை வைக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மைய பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் செயல்படும் லிண்ட் கபே என்ற ஓட்டலுக்குள் நேற்று முன்தினம் காலை தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக சிறை பிடித்தனர்.
16 மணி நேரத்திற்குப் பின் போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தி பணய கைதிகளை பத்திரமாக மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது தீவிரவாதியும், 2 பணய கைதிகளும் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் சுட்டு வீழ்த்திய தீவிரவாதி ஈரான் நாட்டை சேர்ந்த ஹரோன்மோனிஸ் என்றும் 1996ல் ஈரானை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியா வந்து தஞ்சம் புகுந்தவன் என்றும் தெரியவந்தது.
தாக்குதல் நடந்த இடம் அருகே இந்திய தூதரகமும், இந்திய வங்கிகளும், இந்தியர்களின் வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. பணய கைதிகளாக சிக்கியவர்களில் 2 பேர் இந்தியர்கள் என்பதால் இந்தியாவிலும் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள நிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து செயல்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து டெல்லியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லியிலும் தீவிரவாதிகள் ஏதாவது சதி திட்டத்தில் ஈடுபடலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டெல்லி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக வெளிநாட்டினர் அதிகம் வரும் கேளிக்கை விடுதிகள், ஓட்டல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் பாராளுமன்றம், விமான நிலையம், இந்தியா கேட், மெட்ரோ ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மற்றம் சினிமா மால்கள் போன்ற இடங்களில் அதிவிரைவு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பாது காப்பு ஏற்பாடுகளை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து