முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் தேர்தல் நாளில் கலவரம் வெடிக்கும்: சந்திரிகா

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையில் வருகிற 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக மைத்திரி பாலா ஸ்ரீசேனா நிறுத்தப்பட்டுள்ளார்.
இதில் மைத்திரி பாலா ஸ்ரீசேனாவுக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திரிகா நிருபர்களிடம் கூறுகையில்,
எதிர்க்கட்சி வேட்பாளரை தோற்கடிக்கும் வகையில் தேர்தல் நாளில் பயங்கர கலவரத்தை ஏற்படுத்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். 2010ம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும் எதிரணி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தினார்கள். அதே போன்று இப்போதும் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டுமென்றால் சர்வதேச குழு இதை நேரடியாக கண்காணிக்க வேண்டும். ஆனால் அதற்கு ராஜபக்சே இடம் தர மாட்டார். நேர்மையான முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் ராஜபக்சே அதை கண்டுகொள்ளவில்லை. எனவே உண்மையான தேர்தல் நடைபெறுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து