முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீச்சு: 57 தீவிரவாதிகள் பலி

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானின் முக்கிய நகரான பெஷாவரில், ராணுவ பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 132
குழந்தைகள் உட்பட 148 பேர் கொல்லப்பட்டனர்.
கோழைத்தனமான இந்த தாக்குதலை நடத்திய தலிபான்களுக்கு எதிராக உலகம் முழுவதிலும் இருந்து பெரும் கண்டனங்கள் எழுந்தன. மேலும்
பயங்கரவாதத்தை வேர் அறுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை உலக நாடுகள் வலியுறுத்தின.
இதனைத் தொடர்ந்து வெகுண்டெழுந்த பாகிஸ்தான் ராணுவம், ஒரு வாரத்தில் தலிபான்களை ஒழிப்பதென முடிவு செய்து நேற்று களம் இறங்கியது.
ஆப்கான் எல்லையை ஒட்டிய கைபர் மலைப் பகுதியில் பதுங்கியருக்கும் தலிபான்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர், விமானம் மூலம்
நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 57 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. நேற்று ஒரே நாளில் தலிபான்கள் அதிகம் பதுங்கியிருக்கும் டைரா பள்ளத்தாக்கு பகுதியில் 20 ஏவுகனைகள் வீசப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர்
தெரிவித்தார்.
முன்னதாக பெஷாவர் தாக்குதலுக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்,
நாட்டில் இருக்கும் மொத்த பயங்கரவாதமும் வேரறுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய அவர், மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து