முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் நலன் பற்றி பேசுவதை பிரதமர் நிறுத்தி விட்டார்: ராகுல்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஷிகாரிபாரா - மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், விவசாயிகளின் நலன் பற்றி பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி நிறுத்தி விட்டதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ஷிகாரிபாரா, கோட்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அவர் பேசியதாவது,
நல்ல காலம் வரப்போவதாக மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி தெரிவித்து வந்தார். ஆனால் மத்தியில் பாஜக அரசு அமைந்து 8 மாதங்கள் ஆகி விட்ட நிலையில் விவசாயிகளுக்கு எப்போது நல்ல காலம் வரும். ஏழைகளின் நலனுக்காக அவர்களுக்கு 100 நாள் வேலையளிக்கும் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை ரத்து செய்யும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது.
அனைவருக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும். அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும் என்பதுதான் காங்கிரசின் விருப்பமாகும். ஆனால் மோடியோ இதுவரை மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவோம் என பேசியதில்லை. அதே போல் பெண்கள் விவசாயிகளின் நலன் குறித்தும் அவர் பேசவில்லை.
குஜராத்தில் பழங்குடியினருக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை பாஜக அபகரித்து விட்டது. அதே போல் ஜார்கண்டில் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழங்குடியினரின் நிலத்தை அபகரித்து விட்டு நிலத்தை சுத்தம் செய்வதற்காக அவர்கள் துடைப்பத்தை அளிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக நாட்டுக்கு காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என்று மோடி திரும்ப திரும்ப தெரிவித்து வருகிறார்.
சாலை வசதி, மின்சாரம், அணைகள் ஆகியவற்றை அளித்தது காங்கிரஸ்தான். அதே சமயம் ஜார்கண்ட், பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து உள்ளது. ஆனால் ஜார்கண்ட் இன்னும் வளர்ச்சியடையாத மாநிலமாகத்தான் உள்ளது. ஜார்கண்டில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் மாநிலத்தில் இருக்கும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 140 ஆக அதிகரிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்று ராகுல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து