முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா - பாக். இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் கவலையளிக்கிறது: சுஷ்மா

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - சீனா - பாகிஸ்தான் இடையேயான புதிய அணுசக்தி ஒப்பந்தம் கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மேலும் பேசியதாவது,
சீன அரசின் உதவியுடன் பாகிஸ்தானில் ஏற்கனவே இரண்டு அணு உலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் இரண்டு புதிய அணு உலைகளை அமைக்க சீனாவுடன் பாகிஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்நிலையில் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தின் விதிகளை சம்பந்தப்பட்ட நாடுகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியா தயார் நிலையில் உள்ளது. அணு ஆயுத தாக்குதல் போன்ற சம்பவம் இந்தியாவில் நேரிட அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரம் குறித்து சீனாவுடன் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்தியா கேள்வி எழுப்பியது. அப்போது சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டும் அணுசக்தியை பயன்படுத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது என சீனா எங்களிடம் தெரிவித்தது.
அணுசக்தி தொழில்நுட்பம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவும் இடம்பெற்றுள்ளதால் அதை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டியது அந்நாட்டின் பொறுப்பாகும். சீ னா, பாகிஸ்தான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஐ.நா. சபையில் பிரச்சினை எழுப்ப வேண்டிய அவ சியம் இதுவரை ஏற்படவில்லை என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து