முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் உறுப்புத்தானத்தில் தமிழகமே முதலிடம்: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - இந்தியாவிலேயே தமிழகம் தான் உடலுறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அகில இந்திய அளவில் கண்மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான 7 நாள் பயிலரங்கம் நேற்று தொடங்கியது. அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், பயிலரங்கை தொடங் கிவைத்து எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் கண் மருத்துவ இதழை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

.தானங்களில் பிரதான தானம் என கருதப்படுவது கண்தானம் உடல் உறுப்புத்தானமாகும். இதில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மருத்துவத் துறைக்கு கடந்த ஆட்சியில் ரூ.3888 கோடி மட்டுமே நிதி ஒதுக்கினார்கள். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் ரூ.7005 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் இன்று சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.

 முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் எழும்பூர் அரசு கண்மருத்துவமனைக்கு ரூ.2 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்தகால ஆட்சியில் பெயரளவிற்கு மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். அப்பொழுது ரூ.12 கோடி மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு வருவாய் கிடைத்தது. கடந்த 3 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.680 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டும் ரூ.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு தேவையான நவீன கருவிகள் வாங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து