முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி மாளிகையில் மோடி - மம்தா திடீர் சந்திப்பு

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் பிரதமர் மோடியும், திரிணாமுல் தலைவர் மம்தாவும் டெல்லியில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து எல்லா மாநிலங்களிலும் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த பாஜ முயற்சி செய்து வருகிறது.

மகாராஷ்டிரா, அரியானாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜ தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் நடைபெற்று வரும் தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் தங்களது அடுத்த இலக்காக மேற்கு வங்கத்தை குறிவைத்துள்ளது. பர்த்வான் குண்டு வெடிப்பு, சாரதா சிட்பண்ட் மோசடி என மம்தாவுக்கு மத்திய அரசு கடும் நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசுக்கு துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்றும், சிபிஐ பிரதமர் அலுவலகத்தின் ஒரு துறையாக மாறி விட்டது என்றும் மம்தா பானர்ஜி கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில் வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதுக்கு நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது மோடியும் மம்தாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இது அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே போல் மன்மோகன் சிங்கும், மோடியும் சந்தித்து பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.மோடியும், மம்தாவும் சந்தித்துக் கொண்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து