முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைக்கு நடவடிக்கை: ராஜ்நாத்

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

லக்னோ - உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,

நாடு முழுவதும் பொதுமக்களுக்கு உலகத் தரம்வாய்ந்த எல்லா வசதி களுடன் கூடிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்யும். இதற்கு 10 ஆண்டுகள் ஆகலாம். தற்போது 12 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், 4 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக் கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது போதுமானதல்ல. நாட்டின் சராசரி தேவையை கருத்தில் கொண்டால், தற்போதுள்ள மருத்துவமனை களின் எண்ணிக்கை போதுமானவை அல்ல. சில சிறப்பு மருத்துவமனைகள் இருந்தாலும், அதன் மூலம் ஏழைகள் பயன் அடை வதில்லை. ஆரம்ப சுகாதார நிலை யங்களையும் சமூக சுகாதார மையங்களையும் வலுப்படுத்துவது அவசியமாகும். இதைச் செய்தால் மிகப்பெரிய மருத்துவ நிறுவனங் களின் சுமை வெகுவாக குறையும்.

சுகாதார பராமரிப்பின் கீழ் தூய்மையான குடிநீர் வழங்கு வது, சுற்றுப்புறத் தூய்மை ஆகியவற் றிற்கு முன்னுரிமை தரப்படும். நாட்டில் பாயும் நதிகளை 10 ஆண்டுகளில் தூய்மைப்படுத்த இலக்கு நிர்ணயித்து, அதை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து