முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாள நடிகர் அனுப்மேனன் காதல் திருமணம்

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம் - பிரபல மலையாள நடிகர் அனுப்மேனன். இவர் 5 0க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 8க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். சில படங்களை டைரக்டும் செய்துள்ளார். இவரும் கொல்லம் பத்தனபுரத்தை சேர்ந்த ஷேமாவும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இரு  வீட்டார் சம்மதத்துடன் அனுப்மேனன் -ஷேமா திருமணம் நேற்று  முன்தினம் நடைபெற்றது. கொச்சியில் உள்ள அனூப்மேனன் வீட்டில் எளிய முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். பிரபல மலையாள நடிகர் திலீப் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். டைரக்டர் அனூப்மேனன் - ஷேமா இருவரும் தங்கள் திருமணத்திற்கான ஆடம்பர செலவுகளை தவிர்த்து உள்ளனர். அதற்கான பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து