முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஎஸ் அமைப்புக்கு எதிராக போர்: ஒபாமா

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க் - ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா போர் நடத்தும் என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் ஒபாமா பேசுகையில் இதனை தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது,
 
இந்த புதிய நூற்றாண்டில் நாம் 15வது ஆண்டில் இருக்கிறோம். இந்த 15 ஆண்டுகளில் தீவிரவாதம் நம்மை தொட்டு கொண்டுதான் இருக்கிறது. அதற்கு எதிராக புதிய தலைமுறை 2 நீண்ட நெடிய போர்களை சந்தித்துள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க படைகள் பணியாற்றின. 6 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கிலும், தற்போது ஆப்கானிஸ்தானிலும் ராணுவத்தின் பணி முடிந்துள்ளது. தற்போது அங்கு 15 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்.
 
அமெரிக்கா பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகிறது. 1999ம் ஆண்டை போல வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் எப்போதும் கைகோர்த்து நிற்கும். உக்ரைனில் ஜனநாயகம் தழைக்க நேட்டோ ஒத்துழைப்புடன் ஆதரவு அறித்தோம். ரஷ்யாவின் முடிவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தோம். கியூபாவை பொறுத்தவரை 50 ஆண்டுகளாக இருந்த அரசின் கொள்கை முடிவுக்கு வந்துள்ளது.

கியூபாவுடன் நட்புறவு தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் தீவிரவாதத்துக்கு எதிராக போராட அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க போர் ஒன்றே இறுதி முடிவாகும். அதற்காக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து