முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகில்தானில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தளபதி கைது

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

லாகூர் - சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் திவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் ஆட்களை சேர்க்கும் பணியில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றன. தெற்காசிய நாடுகளான பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில் கோரசான் என்ற பெயரில் முன்னாள் தலிபான் இயக்க தளபதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் வசிக்கும் சிரியாவை சேர்ந்த அல்சலாபி என்பவரை பாகிஸ்தான் உளவுதுறை போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த மாதங்களுக்கு முன் சிரியாவில் இருந்து துருக்கி வழியாக பாகிஸ்தானுக்கு தஞ்சம் புகுந்தார். இங்கு லாகூர், கராச்சி உட்பட பல்வேறு நகரங்களில் ஐஎஸ் தீவிரவாத இயக்குத்துக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
 
இவருக்கு உதவியாக, லாகூர் மசூதி ஒன்றில் பிரார்த்தனை குருவாக இருக்கும் ஹபீஸ் தையீப் என்பவர் ரூ.37 ஆயிரம் பெற்றுக் கொண்டு, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். தற்போது ஹபீஸ் தையீப்பை தேடும் பணி நடைபெறுகிறது என்று பாகிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து