முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையத்திற்கு ஒப்புதல்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - தூத்துக்குடி அருகே 1,000 மெகாவாட் உற்பதித் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தை நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிறுவுவதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் சென்னை - பழவேற்காடு சாலைத்திட்டம், திருநெல்வேலியில் மீன் பிடித் துறைமுகம் அமைப்பது ஆகிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்தது. டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில்  நடைபெற்ற, தேசிய வன உயிரின வாரியத்தின் நிலைக்குழுக் கூட்டத்தில், இதர்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழ்நாடு தாது வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் ஆகியவை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வன உயிரினங்கல் வாழும் பகுதியான முள்ளக்காடு வனப்பகுதி அருகே புதிய அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த அனல் மின் நிலையம் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

ரூ.4,910 கோடி முதலீட்டிலான இத்திட்டத்தின் மூலம் 4,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். வன உயிரின சரணாலயங்களின் அருகில் தொழில் நிறுவனங்கல் தொடங்க வேண்டுமெனில், தேசிய வன உயிரின வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும். இதேபோன்று, தெலங்கானாவில் கின்னரசானி வன உயிரின சரணாலயம் அருகில் உள்ள கொத்தக்கூடம் அனல் மின் நிலையத்தில், 800 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி ஆலை அமைப்பதர்கும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மதகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு நீர்ப்பாசனத் திட்டங்கல், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ரயில்பாதைத் திட்டங்கள் ஆகியவற்றுக்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து