முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடிகன் மீது தாக்குதல் அபாயம்: போப் ஆண்டவர் கவலை

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

வாடிகன் - கத்தோலிகர்களின் தலைமையகமான வாடிகனில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவதற்கான அபாயம் இருப்பதாக  போப்ஆண்டவர் கவலையுடன் கூறினார்.

வாடிகனில் பாதுகாப்புப் பணியை கவனித்து வரும் இத்தாலிய போலீஸாரிடையே ஆற்றிய புத்தாண்டு உரையில் போப் ஆண்டவர் கூறியதாவது, மனித குலத்தை கவலையடையச் செய்துள்ள பயங்கரவாதத்தின் நிழலும் அதன் அபாயமும் நம்மீது படிந்துள்ளன. எனினும் கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் இந்த அபாயத்தைக் கண்டு மனம் உடையவோ,விரக்தியடைவோ கூடாது என்று போப் ஆண்டவர் கூறினார்.

ஜ.எஸ். அமைப்புக்கு எதிராகவும் அவர்கள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நிகழ்த்தி வரும் வான்வழித்தாக்குதல்களுக்கு ஆதரவாகவும் போப் ஆண்டவர் பேசிவருகிறார். இதனால்  அவரைக் கொல்ல ஜ.எஸ்.பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக வாடிகனுக்கு ஈராக் தூதர் அல்சாதர் கூறினார். வாடிகனில் தாக்குதல் நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து கடந்த செப்டம்பர்  மாதம் அங்கு பாதுகாப்பு பலத்தபடுத்தப்பட்டது. பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இத்தாலி தலைநகர் ரோமிலும்,வாடிகன் நகரிலும் இத்தாலிய உள்துறை அமைச்சகம் உஷார் நிலையை அறிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து