முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசிடம் நிதி கோரும் அருணாசலப் பிரதேசம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

இடாநகர் - அருணாசலப் பிரதேசத்தில் மிக மோசமான நிலையிலிருக்கும் 1,340 குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழஹ்க ரூ.926.07 கோடி நிதி வழங்குமாறு அம்மாநில அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாநில அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய குடிநீர், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் புது டெல்லியில், நடைபெற்ற தேசிய ஊரகக் குடிநீர் திட்ட ஆய்வுக்குழுக் கூட்டத்தில் அருணாசலப் பிரதேசத்தின் சார்பில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தகம் பாரியோ கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர் மாநிலத்தின் ஊரகப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழஹ்க வேண்டி ரூ.926.07 கோடி நிதி தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

மாநிலத்தில் நிலவிவரும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசின் பங்களிப்பை 90 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பை 10 சதவீதமாகவும் நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார். இவ்வாறு அந்தச் செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து