முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் சட்டத்தை அமல்படுத்த கோரி மீண்டும் போராட்டம்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

 மும்பை - ஊழலை ஒழிக்க வழிவகை செய்யும் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து போராடி வெற்றி பெற்றார். 77 வயதாகும் காந்தியவாதியான அவரது முயற்சியால் மத்திய அரசு லோக்பால் சட்டத்தை இயற்றியது. ஆனால் அந்த சட்டம் இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.
 
இந்த நிலையில் மும்பையில் ஹசாரே நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது,
 
ஊழலை ஒழிக்க மத்திய அரசு இன்னமும் தீவிர கவனம் செலுத்தவில்லை. லோக்பால் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கையெழுத்திட்டு 365 நாட்கள் ஆகி விட்டது. ஆனால் அந்த சட்டம் இது வரை அமல்படுத்தப்படவில்லை. பிரதமர் மோடிதான் ஆட்சிக்கு வந்ததும் லோக்பால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார். மக்களுக்கு அவர் கொடுத்த  இந்த வாக்குறதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக ஆட்சி அமைந்தால் 100 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கருப்பு  பணம் மீட்கப்படும்.

ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடப்படும் என்றனர். ஆனால் 15 ரூபாய் கூட கிடைக்கவில்லை. அது போலத்தான் நிலம் கையகப்படுத்தும் சட்டமும் உள்ளது. பிரதமர் மோடி அரசு இந்த விஷயங்களில் அசட்டையாக உள்ளது. இவற்றை கண்டித்தும் கருப்பு பணத்தை மீட்கவும் லோக்பால் சட்டத்தை அமல்படுத்தவும் மீண்டும் நான் போராட்டம் நடத்த போகிறேன். டெல்லியில் மக்களை திரட்டி இந்த போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து