முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் புறக்கணிப்பு: திருமாவளவன்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை புறக்கணித்து  விடுதலைச்சிறுத்தைகள் கட்சி,  அறிவித்திருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக வளர்மதியை மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

திமுக வேட்பாளராக ஆனந்த்  என்பவரை அறிவித்த கருணாநிதி அவரை பொது வேட்பாளராக கருதி மதச்சார்ப்பற்ற அனைத்து கட்சிகளும் திமுக வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை அவர் எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரிக்காமல் நிராகரித்தன.

இப்போது திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கவில்லை. தேர்தல் புறக்கணிப்பு என்ற பெயரால் திமுகவை புறக்கணித்துள்ளது  சமீபத்தில் பேட்டியளித்த திருமாவளவன், மதச்சார்ப்பற்ற கட்சிகள்  தங்களை ஆதரிக்க வேண்டும் என்று பொதுவாக திமுக கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் தங்களை ஆதரிக்க வேண்டுமென அதிகாரப்பூர்வமாக விடுதலைச்சிறுத்தைகளிடம் கேட்கவில்லை. எனவே யாருக்கு ஆதரவு என்பது குறித்து  முடிவு அறிவிப்பதாக  தெரிவித்த திருமாவளவன், இடைத்தேர்தலில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர் வளர்மதி வெற்றி உறுதி என்பதை மறைமுகமாக தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளன் கூறியதாவது:–

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் மட்டுமல்ல, எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது. ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிட மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. தற்போது நடைபெறும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் அதே நிலைதான் நீடிக்கிறது. இடைத்தேர்தலுக்கு புதிய வரையறைகள் உருவாக்க வேண்டும். . அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கவில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வந்தது. எனவே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வை திருமாவளவன் ஆதரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் தி.மு.க. முறைப்படி எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை என்று அவர் கூறி வந்தார்.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். எனவே கம்யூனிஸ்டு வேட்பாளரை திருமாவளவன் ஆதரிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் யாரையும் ஆதரிக்கவில்லை என்று அறிவித்துள்ளதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

ம.தி.மு.க. போட்டியிடாத நிலையில், பா.ம.க. காங்கிரஸ் கட்சிகளும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவித்துள்ளன. இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் புறக்கணிப்பு திமுக புறக்கணிப்பே என்று திமுக வட்டாரங்கள் கருதுகின்றன. திமுக கூட்டணியில் உள்ள தமுமுக இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் அடுத்தடுத்து வெளியிட்ட இந்த அறிவிப்புகள் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து