முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதசார்பின்மை: சிவசேனா கருத்துக்கு பீகார் முதல்வர் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா - மதசார்பின்மை, சோசலிஷம் உள்ளிட்ட சொற்களை அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளதற்கு பீகார் முதல்வர் மாஞ்சி மற்றும் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
குடியரசு தினத்தின் போது மத்திய அரசு வெளியிட்ட விளம்பரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை இடம் பெற்றிருந்தது.  அதில் மதசார்பின்மை சோசலிஷம் உள்ளிட்ட சொற்கள் விடுபட்டிருந்தன. இந்த விவகாரம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரவுத், மத சார்பின்மை, சோசலிஷம் என்ற சொற்களை அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பேசினார்.

சிவசேனா எம்.பியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பீகார் முதல்வர் மாஞ்சி, காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவி்த்துள்ளனர்.
மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பி நூறாண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சி பாட்னாவில் நடைபெற்றது.

இதில் மாஞ்சி பேசியதாவது,

மத சார்பின்மை தேவையில்லை என சிலர் பேசி வருகின்றனர். இது மிகவும் வருத்தத்துக்குரியது. மகாத்மா காந்தி ஹிந்துக்களுக்காகவா போராடினார். அவர் ஒட்டு மொத்த ஏழை மக்களுக்கும், சமூக ஒற்றுமைக்காகவும் பாடுபட்டார். ஆனால் ஜாதி, மதம், மொழி ஆகியவற்றுக்காக சண்டையிட்டு கொள்ளும் நிலைக்கு மக்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளனர். மனிதநேயம் தான் தற்போதைய தேவை. அது இல்லையென்றால் மிகப் பெரிய விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும் என்றார்.

இது குறித்து துஷார் காந்தி கூறுகையில், மதசார்பின்மை, சோசலிஷம் ஆகிய சொற்களை அரசியலமைப்ரபு சட்டத்தில் இருந்து நீக்க கோருவது கண்டனத்துக்குரியது. மத சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவைதான் நாட்டிற்கு தேவை. மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தினால் இந்தியா என்ற நாடே இருக்காது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து