முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலைநாடுகள் - ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

மாஸ்கோ - ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதட்டம் நீடித்தால் அது போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் கோர்பசேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

ரஷ்யாவை மீண்டும் ஒரு பனிப்போருக்கு மேற்கத்திய நாடுகள் இழுத்துள்ளன. இந்த பனிப்போர் முழு போராக வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். கிழக்கு உக்ரைனில் அரசு படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 5,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த சண்டையில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவியளித்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உக்ரைன் நிகழ்த்தி வரும் தாக்குதல்களுக்கு மேற்கத்திய நாடுகள் உதவுவதாக ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து