முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்: கெஜ்ரிவால்

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உருவப்படத்துக்கு மாலை போட்டு விளம்பரம் வெளியிட்ட பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். அந்த விளம்பரத்தில் அன்னா ஹசாரேவை பாரதிய ஜனதா கொலை செய்துவிட்டதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது. அண்மைய கருத்துக் கணிப்புகளின் படி டெல்லியில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்று ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னா ஹசாரேவின் உருவப்படத்துக்கு இறந்தவர்களுக்கு மாலை போடுவது போல் போடப்பட்டு சித்தரிக்கப்பட்டு இருந்தது. இது அன்னா ஹசாரே ஆதரவாளர்களையும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

இதுதொடர்பாக பாரதிய ஜனதாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 1948ம் ஆண்டு இதே நாள் கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்தார். நேற்று தனது விளம்பரத்தில் அன்னா ஹசாரேவை பாரதிய ஜனதா கொன்றுவிட்டது, பாரதிய ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார், என்றும் ட்விட்டரில் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து