முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தர் தோற்றத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம்

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

திருச்சி - சித்தர் தோற்றத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்தில் கிராமம், கிராமமாக சென்று காலில் செருப்பு அணியாமல்  ஓட்டுவேட்டையாடி வருகிறார். அவரை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த முறை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களின்முதல்வர் ஜெயலலிதாவின் மீதுவைத்துள்ள அன்பின் காரணமாகவும், பற்றின் காரணமாகவும், காலில் செருப்பு அணியாமல் இருந்தார். குறிப்பாக மக்களின் முதல்வர் ஜெயலலிதா வசித்துவரும் போயஸ் தோட்டம் மற்றும் முதலமைச்சாரக பணியாற்றிய தலைமை செயலகத்தையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோவிலாக எண்ணினார் அதனால் அந்த இடங்களுக்கு செல்லும்போது அவர் செருப்பு அணிந்து செல்லும் பழக்கத்தை கைவிட்டார்.

இதனை அறிந்த  மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் செருப்பு அணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஆண்டுதோறும் சபரிமலைக்கு விரதம் மேற்கொள்ளும் போதும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காலில் செருப்பு அணிவதில்லை.

இதற்கிடையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.  வரும் பிப்ரவரி 13ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பணியாற்றுவதற்காக அதிமுக பணிக்குழுவில் 30 அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும்ட  குறைந்தபட்சம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஓட்டுகள் அடங்கிய  பகுதியை ஒப்படைத்து அதில் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  நாச்சிக்குறிச்சி கிராம பஞ்யாத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியாற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அதிமுக தலைமை ஆணையிட்டது.அந்த ஆணையின்படி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்று  ஒரு வாடகை வீட்டில் தங்கி தேர்தல் பணியாற்றி வருகிறார். அவருடன் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் மற்றும் சிவகங்கை மாவட்ட அதிமுக  நிர்வாகிகளும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகளும் அவருடன் தங்கி தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.கிராமம்,கிராமமாக சென்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்களை நேரில் சந்தித்து அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதிக்கு ஆதரவுதிரட்டி வருகிறார்.

 அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்த  இருப்பதால் தாடி, மீசையுடன் காணப்படுகிறார். அவரது தோற்றம் ஒரு சித்தரை போன்று தென்படுகிறது. குறிப்பாக காலை, மாலை இருவேளைகளிலும் அதிமுக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.இந்த நிலையில் தாடி,மீசையுடன் வீடு,வீடாக சென்று இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்து வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து அவர் சொல்வதை செவிசாய்த்து கேட்டு வருகிறார்கள். சித்தர் மகானே நேரில் வந்து தங்களை சந்திப்பதாக எண்ணி பொதுமக்கள் வியப்படைந்தனர்.

இதற்கிடையே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட இரட்டை வாய்க்கால், வாசன் நகர், சோழங்கநல்லூர், மாரியம்மன்கோவில் தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காலில் செருப்பு அணியாமல் தாடியுடன் ஓட்டுக்கேட்டு வருகிறார். அவருடன் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன், மானாமதுரை எம்.எல்.ஏ குணசேகரன் மற்றும் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கழுத்தில் அதிமுக துண்டு அணிந்து நெற்றியில் விபூதியுடன் ஓட்டுக்கேட்க செல்லும்போது அவருடன் வருபவர்கள் இவர்தான் அமைச்சர் ஓட்டுக்கேட்டு வந்துள்ளார் என்று கூறுகின்றனர். இதைப்பார்க்கும் கிராமமக்கள் ஒரு அமைச்சர் இவ்வளவு எளிமையாக சித்தர் தோற்றத்தில் பயபக்தியுடன் ஓட்டுக்கேட்டு வருகிறாரே என ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

குறிப்பாக சித்தர் தோற்றத்தில் சாதரண கிராமத்தானை போல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவதால் மக்கள் எளிதில் அவரை அணுகி தங்களது பகுதியில் நிலவி வரும் ஒருசில பிரச்சனையை சொல்கிறார்கள். அந்த பிரச்சனைகளை அவர்களது வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து பரிவுடன் அமைச்சர் கேட்கிறார். குறிப்பாக மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் அதிமுக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி விளக்குகிறார். இதனால் கிராம மக்கள் அமைச்சர் அளிக்கும் உத்திரவாதத்தையும்,விளக்கத்தையும் ஏற்று அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க உறுதியும் தெரிவித்துவருகிறார்கள். இப்படியே கிராமங்கள் தோறும் சென்று அமைச்சர்  மக்களை நேரில் சந்தித்து ஓட்டுகேட்டு வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து