முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      தமிழகம்
GK-Vasan

சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து த.மா.கா. தலைவர்  ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசு, தற்போதைய கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டை விட இப்போதைய கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீசும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன. 

இப்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு குறைந்து வருகிறது. பல இடங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வறண்டு காணப்படுகின்றன. சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்திற்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது.

எனவே தமிழக அரசு, இந்த கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து