முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை காப்பி அடிக்கிறார் சந்திரபாபு: நடிகை ரோஜா

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

நகரி - பிரதமர் மோடி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அரசின் திட்டங்களை சந்திரபாபு நாயுடு காப்பி அடிக்கிறார் என்று நடிகை ரோஜா தாக்கியுள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்எல் ஏவான நடிகை ரோஜா தனது தொகுதியான நகரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சந்திரபாபு நாயுடு நான் 9 ஆண்டு முதல் முதல்வராகவும், 10 ஆண்டுகள் எதிர்கட்சி தலைவராகவும் இருந்தவர் என்றும், எனது அனுபவத்துக்கு ஈடாக யாரும் இல்லை என்று அடிக்கடி தம்பட்டம் அடித்துக் கொள்வார். ஆனால் தற்போதைய 8 மாத ஆட்சியில் மத்திய அரசு மற்றும் தெலுங்கானா அரசு கொண்டு வந்த திட்டங்களை அப்படியே காப்பி அடித்து வருகிறார். இது தொடர்பான 10 உதாரணங்களை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார். உடனே சந்திரபாபு நாயுடு தூய்மை ஆந்திரா என்ற திட்டத்தை அறிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. உடனே சந்திரபாபு நாயுடு ஸ்மார்ட் வில்லேஜ், ஸ்மார்ட் வார்டு என அறிவித்தார். எம்.பி.க்கள் கிராமங்களை தத்து எடுக்க வேண்டும் என்று மோடி கூறினார். உடனே சந்திரபாபு நாயுடு எம்எல்ஏக்கள் வார்டுகளை தத்து எடுக்க வேண்டும் என்றார்.

தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 43 சதவீத சம்பள உயர்வை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்தார். உடனே அதை சந்திரபாபு நாயுடு காப்பி அடித்தார் ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு மாதசம்பளம் கொடுக்க முடியாத நிலை இருக்கும் போது இங்கு அரசு ஊழியர்களுக்கு 43 தகனீக தம்பள உயர்வை அறிவித்து உள்ளார். அதே போல் தெலுங்கானா அரசு தங்கள் மாநில கலாச்சார, விழாவான பத்துக்கம்மா விழாவை நடத்தியது. இந்த விழா நடத்த மாவட்டத்துக்கு ரூ.1 கோடி வீதம் 10 மாவட்டத்துக்கும் ரூ.10 கோடி ஒதுக்கியது.

உடனே சந்திரபாபு விழாவை கொண்டாட 13 மாவட்டத்துக்கு தலா ரூ. 1 கோடி வீதம் ரூ.13 கோடி ஒதுக்கினார். நிதி நெருக்கடியான நிலையில் இது தேவையா? இது போல் தமிழக அரசு திட்டமான அம்மா உணவகம் போல் அண்ணா கேன்டின் தொடங்கப்படும் என்றார். தமிழகத்தை போல மதுக்கடையை அரசு ஏற்று நடத்த இருப்பதாக கூறினார்.
அது போல் சிங்கப்பூர் போல தலைநகரை அமைப்பேன் என்று வெளிநாட்டையும் காப்பி அடிக்கிறார். இப்படி அனைத்து திட்டங்களையும் அன்டை மாநிலத்தை காப்பி அடிக்கும் சந்திரபாபு நாயுடுவை காப்பி முதல்வர் அல்லது காப்பி பாபு என்று அழைக்கலாம். இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து