முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: வெ.இண்டீஸ் அணியை வென்றது அயர்லாந்து

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் - அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணி 304 ரன்களை குவித்த நிலையில் குட்டி அணியான அயர்லாந்து அதை அநாயாசமாக துரத்தி சென்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.

உலக கோப்பையில் நேற்று குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த குரூப்பில்தான் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதால் இப்போட்டியை இந்திய ரசிகர்களும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர். நியூசிலாந்திந் நெல்சன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகளின் துவக்க ஆட்டக்காரர்களாக ட்வெயின் ஸ்மித் மற்றும் கிறிஸ் கெயில் களமிறங்கினர். 24 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த ஸ்மித் கெவின் ஓ பிரைன் பந்து வீச்சில் ஜான் மூனேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதிரடி ஆட்டக்காரரான கெயில், 65 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்தார்.

அடுத்ததாக களமிறங்கிய டேரன் பிராவோ டக் அவுட் ஆக, மார்லன் சாமுவேல் 21 ரன்களிலும், விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் 1 ரன்களிலும் நடையை கட்டினர். அப்போது மே.இ.தீவுகள் அணி 23.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இந்நிலையில்தான், லென்டில் சிம்மன்ஸ் மற்றும் டேரன் சமி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிம்மன்ஸ் 84 பந்துகளில் 102 ரன்களை விளாச, சமி, 67 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழைந்து 304 ரன்களை எடுத்தது.

அண்ட்ரே ரசல் 27 ரன்களுடனும், கேப்டன் ஜசன் ஹோல்டர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் நின்றனர். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் டக்ரெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து அயர்லாந்து பேட்டிங்கை ஆரம்பித்தது. அந்த அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமாகிய, வில்லியம் போர்டர்ஃபீல்ட் 43 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கெயில் பந்து வீத்தில் ராம்டின்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இருப்பினும் ஒன்-டவுன் பேட்ஸ்மேன் பவுல் ஸ்டிர்லிங் 84 பந்துகளில் 92 ரன்களும், எட் ஜாய்ஸ் 67 பந்துகளில் 84 ரன்களும் எடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்து அவுட் ஆனார்கள். 40வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் திடீரென அடுத்தடுத்து நடையை கட்டியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

285 ரன்களுக்கு நான்காவது விக்கெட்டையும், 290 ரன்களுக்கு 5வது விக்கெட்டையும், 291 ரன்களுக்கு 6வது விக்கெட்டையும் இழந்த நிலையில் அயர்லாந்தின் வெற்றி கேள்விக்குறியானது. அந்த அணியின் ஆன்டி பல்பிர்னி 9 ரன்களுடனும், கேரி வில்சன் 1 ரன்னுடனும், கெவின் ஓ பிரைன் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனதால் அயர்லாந்துக்கு இந்த நிலை ஏற்பட்டது.

ன் 79 ரன்களுடன் அவுட் ஆகாமல் நின்று வெற்றியை உறுதி செய்தார். 45.5வது ஓவரிலேயே அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதே பிரிவில் நேற்று நடந்த தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே போட்டியிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு குட்டியணியான ஜிம்பாப்வே கடும் நெருக்கடி கொடுத்தது. ஆனால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்திய அணியும் ஒவ்வொரு போட்டியிலுமே மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டிய நிலையில் உள்ளது என்பதை இந்த போட்டிகள் நிரூபித்துள்ளன.

அடுத்த போட்டியில் இன்று காலை நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த உலகக் கோப்பையில் அனைத்து அணிகள் தன்னை நிருபிக்க போராடி வருகின்றனர். அந்த வகையில் கத்து குட்டி அணிகளான ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் சிறந்து விழங்குகின்றன. இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து வென்றால் இந்த உலக கோப்பையில் தனது இரண்டாவது  வெற்றியை பதிவு செய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து