முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ரூ.296 குறைந்தது

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. கடந்த 9ம் தேதி ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 744 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் பவுன் ரூ. 20 ஆயிரத்து 656 ஆக விற்றது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ. 58 குறைந்து ரூ. 20 ஆயிரத்து 600 ஆக இருந்தது. பிறகு நேற்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு மீண்டும் ரூ. 296 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 304 ஆக உள்ளது.

கிராமுக்கு ரூ. 37 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 2,538க்கு விற்றது. சர்வதேச சந்தை நிலவரப்படி தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு போன்றவையும் தங்கம் விலை குறைவதற்கு காரணமாகவும் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து