முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மாதம் முதல் ஆன்லைன் மூலம் தங்கும் அறைக்கு முன்பதிவு

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி  - திருப்பதி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் அறை மற்றும் கூடுதல் லட்டுகளை பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை அடுத்த மாதம் முதல் அமலாகிறது.
 
திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்கும்,லட்டு பிரசாதம் பெறவும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனை எளிமையாக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதன் ஒரு கட்டமாக 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையை அமல்படுத்தியது.

கிராம மக்கள் தபால் நிலையங்களில் 300 ரூபாய் டிக்கெட் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதே போல் பக்தர்கள் கூடுதல் லட்டு டோக்கன்கள் பெற ஏற்படுத்தப்பட்டு இருந்த தனி வரிசை ரத்து செய்யப்பட்டு தரிசன வரிசையிலேயே கூடுதல் லட்டுக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு பக்தர் ரூ. 25 விலையில் அதிகபட்சமாக 4 லட்டுகளை கூடுதலாக பெறலாம்.

300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்வது போல கூடுதல் லட்டுகளையும் ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டத்தை தேவஸ்தானம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து அமல்படுத்த உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி கூடுதல் முதன்மை அதிகாரி சாம்பசிவராவ் உத்தரவிட்டுள்ளார். இதே போல் தங்கும் அறைகளையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்கலாராவ் தெரிவித்தார். இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து