முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை புதிய ராணுவத் தலைமைத் தளபதி நியமனம்

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையில் புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சிறிசாந்த் டிசில்வாவை அதிபர் மைத்ரிபால் சிறீசேனா நியமித்தார்.

தற்போது ராணுவத் தலைமைத் தளபதியாக பொறுப்பு வகிக்கும் தயாரத்னநாயக்கவின் பதவிக்காலம் முடிவடைந்தது, புதிய தலைமைத் தளபதியாக சிறிசாந்த்  டிசில்வா இன்று பொறுப்பேற்கிறார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் பலருக்கு ராணுவப் பொறுப்புகளை அதிபர் சிறிசேனா மீண்டும் வழங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போருக்குத் தலைமை வகித்த சரத் பொன்சேகா, போருக்குப் பிந்தைய பொதுத் தேர்தலில் அப்போதைய அதிபர் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றார். அதைத் தொடர்ந்து சரத் பொன்சேகாவை ஊழல் வழக்கில் சிறையிலடைத்த தோடு, அவரது ராணுவ அந்தஸ்தையும் ராஜபக்சே பறித்தார். மேலும், பொன்சேகாவுக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகளையும் பதவியிலிருந்து நீக்கினார்.

இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரது ராணுவ அந்தஸ்தையும் திரும்ப அளித்தார். தற்போது, ராஜபக்சேவால் நீக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து