முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசியின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள்

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - விலைவாசியின் தாக்கத்திலிருந்து, ஏழை, எளிய நடுத்தர மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை  அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த அரசு எடுத்துள்ளது  என்று முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தெரிவி த்துள்ளார்.
 
சட்டசபையில் நேற்று சட்டசபையில்  முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்   பேசியதாவது:,

 தமிழகத்தின் வளர்ச்சியில், அனைத்துப் பிரிவினருக்கும், உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதிலும், வளர்ச்சியின் பயன்கள் ஒரு சிலரை மட்டும் அடையாமல், அனைத்து மக்களையும், அதிலும் குறிப்பாக ஏழை, எளிய, ஒதுக்கப்பட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளார்கள். எல்லோரும் எல்லாமும்  பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்  என்று தனது உள்ளக்கிடக்கினை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அடிக்கடி எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் தான், குடும்ப அட்டைதாரர்களுக்கு,
மாதமொன்றுக்கு  20 கிலோ விலையில்லா அரிசி வழங்குதல்;
கிலோ 30 ரூபாய் என்ற விலையில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு,
1 லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என குறைந்த விலையில் விற்பனை;
கூட்டுறவு நிறுவனங்கள், அமுதம் அங்காடிகள் மூலம் ஒரு கிலோ 20 ரூபாய் என்ற விலையில் அரிசி விற்பனை;
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம், குறைந்த விலையில் தரமான காய்கறிகள் விற்பனை;
ஏழை எளிய மக்கள் பசியாற உண்ணும் வகையில், அனைத்து மாநகராட்சிகளிலும், இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல், சாம்பார் சாதம்
5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் அம்மா உணவகங்கள்;
ஒரு லிட்டர் மினரல் வாட்டர் 10 ரூபாய்க்கு வழங்கும் அம்மா குடிநீர் திட்டம்;
குறைந்த விலையில் அம்மா உப்பு;
குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும் அம்மா மருந்தகங்கள்;
விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கும் அம்மா விதைகள்;
முதியோர்கள், விதவைகள் மற்றும் ஆதரவற்றோர்க்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டம்;
தாலிக்கு 4 கிராம் தங்கத்துடன், 50,000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கும், ஏழைப் பெண்கள் திருமண நிதியுதவி திட்டம்;
தாய் சேய் நலன் காக்கும் வகையில், 12,000 ரூபாய் வழங்கப்படும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டம்;
என, விளிம்பில் உள்ளோரைப் பாதுகாக்கும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
ஏழை எளிய மக்கள், தங்கள் சொந்த கால்களில் நிற்க உதவும், விலையில்லா கறவை மாடு மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்;
ஏழை எளிய மக்கள், சொந்த வீடு கட்டிக் கொள்ள வகை செய்யும், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய, பசுமை வீடுகள் திட்டம்;
இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம்;
நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் திட்டம்;
ஏழை எளிய நடுத்தர மக்களின், வீடு கட்டும் சுமையைக் குறைக்கும் வகையில், மூட்டை ஒன்றுக்கு 190 ரூபாய் விலையில், விற்பனை செய்யப்படும் அம்மா சிமெண்ட் திட்டம்;
தாய்மார்களின் பணிச் சுமையைக் குறைக்கும், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் திட்டம்;
என ஏழை எளிய மக்களின் வாழ்வில், வசந்தம் வீசச் செய்யும், வண்ணமிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விலைவாசி உயர்வு பற்றி, இந்த அவையிலே சில  உறுப்பினர்கள் பேசியுள்ளனர். ஆனால் திமுகவைச் சார்ந்த உறுப்பினர்கள்,  இந்த அவையிலும் அவைக்கு வெளியேயும் இதைப் பற்றி பேசுவது தான் வேடிக்கையான விந்தை.  விலைவாசி உயர்வு பற்றி, இந்த மாமன்றத்தில் 17.4.2008 அன்று நடைபெற்ற விவாதத்தின் போது, அப்போதைய மைனாரிட்டி திமுக ஆட்சியின்  முதலமைச்சராக இருந்த திரு.மு. கருணாநிதி அவர்கள்,

விலைவாசி உயர்கிற நேரத்தில், வாங்கும் சக்தி  அதிகமானால்  விலைவாசியினுடைய கனம் தெரியாது,  சுமை தெரியாது, என்பது ஒரு பொருளாதாரக் கணக்கு.  ஒரு காலத்திலே தங்கத்தினுடைய விலை, பவுன் விலை 20 ரூபாயாக இருந்தது.  இன்றைக்கு பவுன் விலை ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய், நாலாயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் என்று, சகட்டுமேனிக்கு ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.  ஆகவே, வாங்கும் சக்தி உள்ளவராக ஒரு சாதாரணப் பிரஜை ஆகிவிட்டால், எவ்வளவு தான் விலைவாசி உயர்ந்தாலும், அது தேர்தலிலே பயன்படுத்துவதற்காகத்தான் பயன்படுமே தவிர, அந்த உயர்வினால் யாரும் கஷ்டப்படமாட்டார்கள்.  ஆனால் அதைச் சமாளிக்க, வாங்கும் சக்தியை நாம் உயர்த்த வேண்டும்.  அந்தப் பொருளாதாரத்தை ஒரு நாடு கடைப்பிடிக்க வேண்டும்; ஓர் ஆட்சி கடைப்பிடிக்க வேண்டும்.  அப்படிக் கடைப்பிடித்தால் விலைவாசியினால் பெரும் பாதகம் ஏற்பட்டுவிடாது"

என்றெல்லாம் ஒரு பெரிய பிரசங்கமே நிகழ்த்தினாரே தவிர, அந்த விலைவாசி உயர்விலிருந்து, ஏழை, எளிய, நடுத்தர மக்களைக் காப்பாற்றுவதற்கான, எந்த ஒரு நடவடிக்கையும் .கருணாநிதி எடுக்கவில்லை.  ஆனால், புரட்சித் தலைவி  அம்மா அவர்கள், விலைவாசி உயர்வின் தாக்கத்தில் இருந்து, ஏழை எளிய நடுத்தர மக்களைக் காப்பாற்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் என்பது தான் உண்மை.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, மாநில அரசு எடுக்கக் கூடிய நடவடிக்கை குறைவானது தான்.  அவற்றைக் குறைவின்றி,  அம்மா அவர்களது அரசு எடுத்துள்ளது. விலைவாசியின் தாக்கத்திலிருந்து, ஏழை, எளிய நடுத்தர மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மட்டுமே, மாநில அரசு செய்ய இயலும். அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தும், முன்னால் நான் குறிப்பிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அத்தகைய நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது.
 
மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப் பிரச்சனைகளில்,  தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைத்திட, தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டிட, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  அம்மா அவர்கள் மேற்கொண்டார்கள்.  அம்மா அவர்களின் அந்த திட்டமிட்ட செயல்பாடுகளை, தீர்க்கமான நடவடிக்கைகளை  அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.  அவை பற்றி எல்லாம் விரிவாக, விவாதங்களின் போது நான் எடுத்து கூறியுள்ளேன்.!இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து