முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தற்போது ரெயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே நெரிசலை குறைப்பதற்காக 16 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:– 1. ரெயில் எண்: 16733/16734 ராமேஸ்வரம் – ஓகா – ராமேசுவரம் இடையே செல்லக்கூடிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2–வது வகுப்பு படுக்கை ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் வருகிற 27–ந் தேதி முதல் ஜூன் 26–ந் தேதி வரை இணைக்கப்படுகிறது. ஓகாவில் இருந்து புறப்படும இந்த ரெயில் மார்ச் 3–ந் தேதி முதல் ஜூன் 30–ந் தேதி வரை இணைக்கப்படும்.

2. ரெயில் எண்: 12664/12663 திருச்சி – ஹவுரா – திருச்சி வாரம் இருமுறை செல்லும் இந்த ரெயிலில் 3 அடுக்கு ஏ.சி.ஒருபெட்டி இன்று முதல் வருகிற ஜூன் 26–ந் தேதி வரை இணைக்கப்படுகிறது. ஹவுராவில் இருந்து புறப்படும் இந்த ரெயிலில் வருகிற 26–ந் தேதி முதல் ஜூன் 28–ந் தேதி வரை இணைக்கப்படும்.

3. ரெயில் எண்: 16031 / 16032 சென்னை சென்ட்ரல்– ஜம்மு தாவி – சென்ட்ரல் வாரம் 3 முறை செல்லும் இந்த ரெயிலில் 2–ம் வகுப்பு படுக்கை ஒரு பெட்டி நாளை (25–ந் தேதி) முதல் ஜூன் 28–ந் தேதி வரை இணைக்கப்படுகிறது. ஜம்மு தாவியில் இருந்து புறப்படும் இந்த ரெயிலில் வருகிற 27–ந் தேதி முதல் ஜூன் 30–ந் தேதி வரை இணைக்கப்படும்.

4. ரெயில் எண்: 16093 – 16094 சென்ட்ரல் – லக்னோ – சென்ட்ரல் இடையே வாரம் இருமுறை செல்லும் ரெயிலில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி ஒரு பெட்டி இன்று முதல் ஜூன் 27–ந் தேதி வரையிலும், லக்னோ–வில் இருந்து புறப்படும் ரெயில் வருகிற 26–ந் தேதி முதல் ஜூன் 29–ந் தேதி வரையிலும் இணைக்கப்படுகிறது.

5. ரெயில் எண்: 12647 / 12648 கோவை – நிஜாமுதீன்– கோவை வாராந்திர ரெயிலில் 2–ம் வகுப்பு படுக்கை பெட்டி ஒன்று ஜூன் 28–ந் தேதி வரை இணைக்கப்படும். நிஜாமுதீனில் இருந்து புறப்படும் ரெயிலில் நாளை முதல் (25–ந் தேதி) ஜூலை 1–ந் தேதி வரை இணைக்கப்படும்.

6. ரெயில் எண்: 12682 / 12681 கோவை – சென்ட்ரல்– கோவை வாராந்திர ரெயிலில் 2–ம் வகுப்பு படுக்கை ஒருபெட்டி வருகிற 27 முதல் ஜூன் 26–ந் தேதி வரையிலும், சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரெயிலில் வருகிற 28–ந் தேதி முதல் ஜூன் 27–ந் தேதி வரையிலும் இணைக்கப்படும்.

7. ரெயில் எண்: 16605/16606 மங்களூர் – நாகர்கோவில்– மங்களூர் ரெயிலில் 2–ம் வகுப்பு சேர்கார் 2 பெட்டிகளும் (ரிசர்வ்) , 2–ம் வகுப்பு சேர்கார் (பொது) 2 பெட்டிகளும் வருகிற 27–ந் தேதி முதல் ஜூன் 27 வரையிலும், நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரெயிலில் வருகிற 28 முதல் ஜூன் 28–ந் தேதி வரையிலும் இணைக்கப்படும்.

8. ரெயில் எண்: 22609 / 22610 மங்களூர் – கோவை– மங்களூர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2–ம் வகுப்பு சேர்கார் 2 பெட்டிகளும் (ரிசர்வ்), 2–ம் வகுப்பு சேர்கார் 2 பெட்டிகள் (பொது) வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் ஜூன் 27–ந் தேதி வரையிலும், கோவையில் இருந்து புறப்படும் ரெயிலில் வருகிற மார்ச் 2–முதல் ஜூன் 28–ந் தேதி வரை இணைக்கப்படும். மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து