முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க பத்திர திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - தங்க பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அருண்ஜெட்லி இது குறித்து மேலும் கூறியதாவது,
தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்வோர் வட்டி பெற வசதி செய்யப்படும். தங்க பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தங்கத்தை சந்தைக்கு கொண்டு வர புதிய கொள்கை வகுக்கப்படும். அசோக சக்கரத்துடன் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படும். கூடங்குளம் 2வது அணு உலை 2015-16ல் அமைக்கப்படும். குழந்தைகள் பாதுகாப்பிற்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்படும். குழந்தைகள் நலனை மேம்படுத்த ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மகாத்மாக காந்தி ஊரக திட்டத்திற்கு 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. பெண்களின் பாதுகாப்பிற்கான நிர்பயா திட்டத்திற்கு கூடுதலாக ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கம்பெனி விவகார சட்டங்களில் திருத்தம் செய்யப்படும். சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து